ஏழைகளுக்கு வரப்பிரசாதம்.. மரக்காளானில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து.. பேராசிரியர் சாதனை

சென்னை:


சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர், புற்றுநோயை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளார். இந்த பேராசிரியரின் பெயர் கவியரசன் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள பேராசிரியர் கவியரசன், மரக்காளான் எனப்படும் ஒருவகை காளான்களில் இருந்து புற்றுநோயை கட்டுப்படுத்தும் மருந்தை தயாரித்துள்ளதாக கூறியுள்ளார்.

மரக்காளான்களின் மூலம் தாம் தயாரித்துள்ள மருந்தானது புற்றுநோயை 80 சதவீதம் வரை கட்டுப்படுத்தும் என்றார். 600-க்கும் மேற்பட்ட காளான்களை ஆய்வு செய்து இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளதாக கவியரசன் கூறியுள்ளார், தாம் கண்டறிந்த மருந்திற்கு மத்திய அரசு வழங்கும் காப்புரிமையை பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார் கவியரசன். புற்றுநோய் பாதிக்கப்பட்ட செல்களை தமது ஆய்விற்கு உட்படுத்தியதாக கூறினார்.