மெடிக்கல் மிராக்கிள்.. பல் வலிக்கு மருந்து தடவிய பெண் ரத்தம் ப்ளூ கலராக மாறிய பரிதாபம்

நியூயார்க்: பல் வலிக்கு நிவாரணம் தரும் ஒரு வகையான க்ரீமை பயன்படுத்திய 25 வயது இளம்பெண்ணுக்கு அவரது ரத்தம் சிகப்பு நிறத்திலிருந்து நீல நிறமாக மாறிவிட்டது.


அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு பல் வலி ஏற்பட்டது. இதற்காக வலி நிவாரணி மருந்தை எடுத்து பற்களின் மேல் பூசியுள்ளார்.

இதையடுத்து இரவு நன்றாக தூங்கிய அந்த பெண்ணுக்கு உடல் மோசமாகவும், சோர்வாகவும் மூச்சுவிட சிரமமாகவும் இருந்தது. அத்துடன் அவரது உடலில் நீல நிறமாக இருந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். இது போல் உடல் நீல நிறமாக மாறியதற்கு மருத்துவ உலகில் சயனாட்டிக் என அழைக்கப்படுகிறது.


அந்த பெண் பயன்படுத்திய கிரீமில் உள்ள மறத்து போகும் தன்மை நரம்புகளை அழித்துவிடும். மேலும் அந்த பெண் அதிக வலியால் அதிக அளவிலான கிரீமை பயன்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.